இலங்கையில் மீண்டும் சின்னம்மை நோய் பரவி வருவதாக விசேட வைத்திய நிபுணரும் கிழக்கு மாகாண தொற்றுநோய் நிபுணருமான எஸ்.அருள்குமரன் தெரிவித்துள்ளார்.
சின்னம்மை நோயிலிருந்து விடுபட்ட நாடாக கருதி, உலக சுகாதார தாபனத்தினால் இலங்கைக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
எனினும், எதிர்பாரா விதமாக இலங்கையில் 710 பேருக்கும் மேற்பட்டோருக்கு சின்னம்மை தொற்று ஏற்பட்டுள்ளதாக எஸ். அருள்குமரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இது எமது நாட்டிற்கு ஒரு பாரிய பின்னடைவு எனவும் அவர் கூறியுள்ளார்.



















