களுத்துறை பாணந்துறை – ஹொரண வீதியில் மஹபெல்லான சந்திக்கு அருகில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அலோபோமுல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் மற்றுமொரு நபரும் காயமடைந்துள்ளனர்
பாணந்துறையில் இருந்து பண்டாரகம நோக்கி பயணித்த கார் ஒன்று முன்னால் சென்ற லொறியை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்திசையில் வந்த கெப் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்



















