கனடாவின் ரொறன்ரோ பகுதியில் புத்தாண்டை முன்னிட்டு இலவச போக்குவரத்து சேவை வழங்கப்பட உள்ளது.
ரொறன்ரோவின் பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள் இவ்வாறு இலவச போக்குவரத்து சேவைகளை வழங்குகின்றன.
31ம் திகதியான இன்று இரவு 7.00 மணி முதல் நாளை புத்தாண்டு காலை 8.00 மணி வரையில் இவ்வாறு போக்குவரத்து சேவை மேற்கொள்ளப்பட உள்ளது.
ரொறன்ரோ ட்ரான்சிட் சேர்விஸ் மெட்ரோலிங்க்ஸ் ஆகிய பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள் மக்களுக்கு இலவச போக்குவரத்து சேவையை வழங்குகின்றன.
அநேகமான பிரதான இடங்களுக்கு பஸ் மற்றும் ரயில் சேவைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளன.
மக்களின் நலனை கருத்திற்கொண்டு இவ்வாறு இலவச போக்குவரத்து சேவை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.