லிட்ரோ நிறுவனத்தை அடுத்து லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் தங்களது எரிவாயுவின் விலையை அதிகரித்துள்ளது.
இன்று(01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விலை
இதன்படி, இதன்படி, 12.5 கிலோ 755 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 4,740 ரூபாவாகும்.
மேலும், 5 கிலோ எடை கொண்ட சிலிண்டர் 305 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 1,900 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ எரிவாயுவின் விலை
இதேவேளை, லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 685 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 4,250 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது
5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 276 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 1,707 ரூபாவாகும்
2.3 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 127 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 795 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.