இந்தியாவில் பதிவாகியுள்ள JN.1 புதிய கொவிட் மாறுபாடு தொடர்டபில் சுகாதார அமைச்சகம் தொடர்ந்து அவதானம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இதுவரை நடத்தப்பட்ட மாதிரி பரிசோதனையில் எந்த நோயாளியும் பதிவாகவில்லை என மைச்சர் கூறியுள்ளார்.
நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சுகாதார நடைமுறை
எப்படியிருப்பினும், கடந்த கொவிட் பருவத்தில் பின்பற்றப்பட்ட முறையான சுகாதார நடைமுறைகளை மீண்டும் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.