கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மாலைதீவுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை விட இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தரவுக் குறிப்பொன்றை முன்வைத்து தெரிவித்துள்ளார்.
டிசம்பரில் 210,352 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர், இது 2022 டிசம்பருடன் ஒப்பிடுகையில் 129 வீத அதிகரிப்பாகும்.
எவ்வாறாயினும், ஆண்டு முழுவதும் வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், மாலைதீவு 1.87 மில்லியன் சுற்றுலாப் பயணிகளுடன் முன்னணியில் உள்ளது மற்றும் இலங்கைக்கு வருகைத் தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.48 மில்லியன் ஆகும்.