நாட்டில் மீண்டும் கார்களை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி 1000சிசிக்கும் குறைவான திறன் கொண்ட கார்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இறக்குமதிக்கு தேவையான ஏற்பாடுகள் அடுத்த மாதத்திற்குள் செய்யப்படும் என தொழிற்சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் வருமான வரியை உயர்த்துவதும் முக்கிய நோக்கங்களில் இதுவும் ஒன்றாகும் எனவும் கூறப்படுகிறது.
இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் குறைந்த எஞ்சின் திறன் கொண்ட கார்கள், வெளிநாட்டு கையிருப்பை நிலையாக வைத்திருப்பதற்கான திட்டம் என தெரிவிக்கப்படுகிறது.