பாடல் போட்டியில் வெற்றி பெறுவது என்பது முடிவல்ல. அது ஆரம்பம் என தெரிவித்த பிரபல தென்னிந்திய பாடகர் பாலக்காடு ஸ்ரீராம் அசானி, கில்மிஷா ஆகியோர் முறைப்படி சங்கீதம் கற்று தொடர்ந்து இசைத்துறையில் பயணித்து சாதிக்கவேண்டும் என்றார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று (2024.01.03) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே, தென்னிந்தியாவின் பிரபல பாடகரும் புல்லாங்குழல் இசைக் கலைஞருமான பாலக்காடு ஸ்ரீராம் இதனை குறிப்பிட்டார்.
மேலும் தெரிவிக்கையில்,
தொலைக்காட்சி பாடல் போட்டிகளில் வெற்றி பெறுவது என்பது பெரிய விடயம். அங்கும் முன்னரை போல் அல்லாமல் பல பிரச்சனைகள் உள்ளது. நானும் சில போட்டிகளில் நடுவராக இருந்துள்ளேன்.
பாடல் போட்டியில் வெற்றி பெறுவது என்பது முடிவல்ல. இது ஆரம்பம். ஆகவே முறைப்படி சங்கீதம் கற்று தொடர்ந்து இசைத்துறையில் பயணித்து சாதிக்கவேண்டும். அதுவும் இங்கிருந்து வந்து இந்தியாவில் சாதிப்பது கடினம். அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றார்.