பிரித்தானிய ஆன் இளவரசி மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோரின் யாழ்.வருகையால் யாழ்.பொது நூலகம் சுமார் மூன்றரை மணி நேரம் பூட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் நேற்றைய தினம் (11.01.2024)யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்
நூலகம் பூட்டு
இளவரசி உள்ளிட்ட குழுவினர் யாழ்.பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்டமையால் பாதுகாப்பு ஏற்பாட்டிற்காக நூலகம் மூன்றரை மணி நேரம் பூட்டப்பட்டது என தெரிவிக்கப்பட்ட போதிலும் , அறிவித்தலில் ” விசேட காரணம்” என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக நூலக வாசகர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதாக அறிய முடிகிறது. இளவரசி வருகை காரணமாக பொதுசன நூலகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பொலிஸார், பாதுகாப்பு பிரிவு கடமையில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.