வடக்கின் அடையாளமாக றீ(ச்)ஷா சுற்றுலாத்தலம் மாறிவருகிறது.
இங்கு பலதரப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இருப்பதோடு, வாழ்வை முன்னேற்றும் வகையிலான சிறுகைத்தொழில் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இயக்கச்சியில் அமைந்திருக்கும் இந்த பண்ணையானது, இலங்கையிலுள்ள சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதுள்ளது.
பல அனுபவங்களை கொடுக்கும் றீ(ச்)ஷாவில் பசுமை பண்ணை கால்நடை வளர்ப்பு, விவசாய பயிர்செய்கை மற்றும் காளான் வளர்ப்பு போன்றவையும் சிறப்பாக பேணப்பட்டு வருகின்றன.
இவ்வாறு ஒரே சுற்றுவட்டத்தில் பல்வேறு பார்வைத்தளங்களை கொண்டுள்ள இந்த றீ(ச்)ஷா பண்ணை குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் ஈர்த்துள்ளது…