நாட்டில் பல அரச நிறுவனங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளன.
குறித்த இந்த முறையைப் பயன்படுத்தி பொது தேவைகளுக்காக வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கு SUV வாகனம், சுகாதார அமைச்சுக்கு 21 வண்டிகள், கல்வி அமைச்சுக்கு இரண்டு பேருந்துகள் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் வெளிநாட்டு உதவியின் அடிப்படையிலேயே இந்த நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளத இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.



















