தேயிலை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படும் ஒரு மூடை உரத்தை 8,500 ரூபாயிற்கு விற்பனை செய்வதற்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் அரசாங்கத்திற்கு சொந்தமான உர நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தற்போது, ஒரு மூடை உரம் 12,000 முதல் 14,000 ரூபாயிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.