இந்தியாவின் கோவையைச் சேர்ந்த நகை வடிவமைப்பாளர் ஒருவர் ஜல்லிக்கட்டை ஊக்குவிக்கும் விதமாக பூதக் கண்ணாடியை கொண்டு சூரிய ஒளி மூலம் ஜல்லிக்கட்டு ஓவியத்தை வரைந்து அசத்தியுள்ளார்.
தமிழகத்தின் கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் யூ.எம்.டி.ராஜா. தங்க நகை வடிவமைப்பாளராக பணிபுரிந்து வரும் இவர் அரிசி, மாங்கனி, முட்டை ஓடு, சோப்பு, மெழுகு உள்ளிட்டவையில் வித்தியாசமான முறையில் படங்கள் வரைவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை எதிர்வரும் (15.01.2024) ஆம் திகதி கொண்டாடப்பட உள்ளது.
பொங்கல் பண்டிகையின் முக்கியமான நிகழ்வாக தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் அவர், பூதக்கண்ணாடியை கொண்டு சூரிய ஒளி மூலம் ஜல்லிக்கட்டு ஓவியம் வரைந்துள்ளார்.
இதில் ஜல்லிக்கட்டு காளையும், மாடுபிடி வீரரும் இடம்பெற்றுள்ளனர்.
இதற்காக 7 மணி நேரம் எடுத்து கொண்ட ராஜா, “தமிழர்களின் வீரத்தையும் பாரம்பரியத்தையும் உலகுக்கு பறைசாற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.