இலங்கை மின்சார சபை கடந்த ஒன்பது வருட காலத்தின் பின் இலாபத்தை பதிவு செய்ததன் பின் பெப்ரவரி முதலாம் திகதி முதல் 3.34 வீதத்தினால் மின்சார கட்டணத்தை குறைக்க முன்வந்துள்ளது.
இது தொடர்பான முன்மொழிவு பொதுப்பயன்பாடுகள் ஓழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறையும் கட்டணம்
அதன்படி, தற்போது 180 ரூபாவை செலுத்தும் 0 – 30 கிலோவோட் மின்சார நுகர்வோர்களுக்கு 15 ரூபாய் குறைவு ஏற்படும் அதேவேளை 91 – 120 கிலோவாட் மின்சாரத்தை நுகர்வோர் 60 ரூபா குறைப்பை பெறுவார்கள்.
இதன்படி அவர்களின் கட்டணம் 1,180 ரூபாவிலிருந்து 1,120 ரூபாவாகக் குறையவுள்ளது.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் கொள்கை அறிவுறுத்தல்களின் அடிப்படையில் குறைந்த வருமானம் உடைய பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் மற்றும் பொருளாதார ரீதியாக முக்கியமான வணிகங்களின் நிறுவனங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் புதிய கட்டண முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளது.