மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட கருப்பு மிளகை ஏன் உணவில் சேர்க்க வேண்டும்? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கருப்பு மிளகின் பயன்கள்
உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்களுக்கு மிளகு ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. இதனுடைய சிறந்த உறிஞ்சுதல் திறன் கால்சியம் சோடியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகின்றன.
இதில் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் நிறைந்துள்ள நிலையில், தொண்டை வலியிலிருந்து சிறந்த நிவாரணம் கொடுக்கின்றது.
புதிதாக தூள் செய்யப்பட்ட மிளகு பொடியில் அழற்சி எதிர்ப்பு, ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் பண்புகள் உள்ள நிலையில், இது புற்றுநோயை எதிர்த்து போராடவும் செய்கின்றது.
கொலஸ்ட்ராலை குறைக்க கருப்பு மிளகு அதிகமாக உதவி செய்கின்றது. அதாவது கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது இருதய நோய் வருவதற்கான அபாயமும் ஏற்படுகின்றது.
கருப்பு மிளகு மற்றும் வெந்நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வதன் மூலம், ரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைத்திருக்கும்.