2024ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் திகதி அனுர திஸாநாயக்கவினால் புதிய வர்த்தமானி வெளியிடப்படும் என ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
பொதுக்கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதி பதவிக்காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 18 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
புதிய ஜனாதிபதி நியமனம்
அதன்படி அக்டோபர் மாதம் 5 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்தி புதிய ஜனாதிபதியை நியமிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, புதிய ஜனாதிபதியாக அனுர திஸாநாயக்கவினால் புதிய வர்த்தமானி வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளார்.