சிறகடிக்க ஆசை
தமிழ் சின்னத்திரையில் அடடே சூப்பர், சீரியலும் சூப்பர், ஜோடியும் டக்கர் என ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக கொண்டாடும் ஒரு தொடர் தான் சிறகடிக்க ஆசை.
முத்து-மீனா என்ற புதிய ஜோடி நடிக்க அவர்களை வைத்து ஒளிபரப்பாகும் இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
அழகிய குடும்பம், விறுவிறுப்பான கதைக்களம், ஒரே விஷயத்தை அப்படியே இழுக்காமல் உட்னே உடனே திருப்பங்கள் இருப்பது, குடும்பம் எவ்வளவு முக்கியம் என்பதை அடிக்கடி கூறுவது என நிறைய ரசிகர்கள் ரசிக்கும் விஷயங்கள் இதில் அதிகம் உள்ளது.
தற்போது தொடரில் பொங்கல் ஸ்பெஷல் எபிசோட் வரப்போகிறது, 1 மணி நேரம் சீரியல் ஒளிபரப்பாகிறது.
புதிய நடிகர்
இந்த தொடரில் தனது அப்பா பணக்கார அப்பா என்று பொய் சொல்லி அதற்கான நிறைய விஷயங்கள் செய்து வருபவர் தான் ரோஹினி. அவர் தற்போது பொங்கல் சீர் பிரச்சனையில் இருந்து தப்பிக்க ஒருவரை ஏற்பாடு செய்கிறார்.
அவரின் உறவினராக தற்போது சீரியலில் நியூஎன்ட்ரி கொடுக்கிறார் பிரபல நடிகர் ஜெயமணி. இவர் திருமதி செல்வம் தொடரில் பூங்காவனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர்.
தற்போது இவர் தொடரில் என்ட்ரி கொடுக்க காமெடிக்கு பஞ்சமே இருக்காது என்கின்றனர்.
View this post on Instagram