முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத மீனவர் ஒருவரின் சடலம் இன்று (19) கரையோதுங்கியுள்ளது.
முள்ளிவாய்க்கால் இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதி கடற்கரையில் தெப்பம் ஒன்றில் மிதந்து வந்த நிலையில் கரை ஒதுங்கி இருக்கின்றது.
தெப்பத்தில் தெலுங்கு மொழிகள்
தெப்பத்தில் உள்ள கேன்களில் இந்தியாவின் தெலுங்கு மொழிகள் எழுதப்பட்ட அடையாளங்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் உயிரிழந்தவர் இந்நிய மீனவராக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சடலம் கரையோதுங்கியுள்ளமை தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.