நாட்டில் கடந்த சில மாதங்களாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கரட் விலை அதிகரித்தால் அதை விட்டு வேறு மரக்கறிகளை உண்ணுமாறு மக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
கேரட் விலை
அதேவேளை கரட் விலை சில தினங்களாக இரண்டாயிரம் ரூபாவை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், மரக்கறி விலைகள் வானமளவிற்கு உயர்ந்துள்ளதுடன் வரலாறு காணாத வகையில் கரட் விலை அதிகரித்துள்ளது என்பது உண்மை தான்.
அதற்கு மாற்று வழிகளை நாம் பின்பற்ற வேண்டும். கரட் தான் சாப்பிடனும் என்று அவசியம் இல்லை. வேறு எதுவும் சாப்பிடலாம் எனவும் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.