யாழ்ப்பாணம் கோப்பாய் மத்திய பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலே கோப்பாய் பொலிஸாரால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த சுற்றிவளைப்பின் போது நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் 10 லிட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



















