ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சந்தியா ராகம் தொடர் கடந்த வருடம் அக்டோபரில் ஒளிபரப்பை தொடங்கியது. தற்போது 75 எபிசோடுகளை கடந்து சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்த VJ தாரா தற்போது திடீரென வெளியேறி இருக்கிறார். அவருக்கு பதிலாக பாவனா லஸ்யா தற்போது நடிக்க தொடங்கி இருக்கிறார்.
சொல்ல முடியாத பிரச்சனை?
இந்நிலையில் தற்போது நடிகை தாரா இன்ஸ்டாக்ராமில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். ‘கனத்த இதயத்துடன் சந்தியா ராகம் தொடரில் இருந்து வெளியேறுகிறேன். என்ன பிரச்சனை என்பதை கண்டிப்பாக வெளியில் சொல்ல முடியாது’ என குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் #Moveon என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டு இருப்பதால், சீரியல் குழு உடன் ஏற்பட்ட பிரச்சனையால் தான் வெளியேறிவிட்டாரா என கேள்வி எழுந்திருக்கிறது.