நாடளாவிய ரீதியில் இன்று (2024.01.24) காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனவரி மாத சம்பளத்துடன் 35,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட ஏயுவு கொடுப்பனவை இணைப்பதற்கு திறைசேரி மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இடையூறு செய்வதாக ஜனாதிபதி நிதி அமைச்சர் என்ற ரீதியில் முன்வைத்த அமைச்சரவை பத்திரம் மூலம் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இம்மாத சம்பளத்துடன் உரிய கொடுப்பனவு வழங்கப்படாவிட்டால் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக நேற்று கூடிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபை தீர்மானித்துள்ளது.