நமது வீட்டில் வளர்க்கும் செடி, மரங்கள் கூட அதிர்ஷ்டத்தையும், நேர்மறையான விளைவையும் கொடுக்கின்றது. ஜோதிடம் தெரிந்தவர்கள் செல்வ வளம் பெருக வீட்டில் எந்த செடியை வைக்கலாம் என்பது தெரிந்திருக்கும்.
பெரும்பாலான வீடுகளில் இருக்கும் கற்றாழையை சரியான திசையில் வைத்தால், உங்களது முன்னேற்றம் படிப்படியாக நன்றாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
நிதி ஆதாரங்களை அதிகரிக்கும் கற்றாழையை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
கற்றாழையை எந்த திசையில் வைக்க வேண்டும்?
கற்றாழையை கிழக்கு திசையில் நடுவது மங்களகரமானதாக கருதப்படுகின்றது. காரணம் சூரியன் கிழக்கில் உதிக்கும் போது அதிலிருந்து வரும் கதிர்கள் நாள்முழுவதும் சக்தியை வழங்குகின்றது.
ஆனால் சிலர் வீட்டில் கற்றாழை மேற்கு திசையில் வைக்கப்பட்டுள்ளது. இதுவும் மங்களகரமானதாக கருதப்படுவதுடன், பணத்தட்டுப்பாடு இல்லாமல், புதிய வருமான ஆதாரங்கள் கிடைப்பதுடன், விலையுயர்ந்த நகைகளால் பெட்டகத்தை நிரப்பும் அளவிற்கு பணமழை கிடைக்குமாம்.
ஆயுர்வேதத்தில் மிகவும் மருத்துவ குணம் கொண்டதாக கருதப்படுவதுடன், சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைக்கின்றது.
சரியான திசையில் வைத்தால் வீட்டில் எப்பொழுதும் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும்.
கற்றாலையில் இருக்கும் ஜெல் பல நோய்களை தீர்ப்பதுடன், ஆரோக்கியத்தையும், வீட்டில் ஆற்றலையும் அதிகரிக்கின்றது.