கட்டாருக்கு பணிபுரிவதற்காக சென்றிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கட்டார் நாட்டிற்கு தொழில் நிமிர்த்தம்சென்று 26 நாட்களே ஆன நிலையில் வாகன விபத்தில் சிக்கி யாழ்ப்பாணம் – நவக்கிரியை சேர்ந்த 24 வயதான டிபில்ஸ்குமார் துவிகரன் என்ற ஒரு பெண் பிள்ளையின் தந்தையை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் அல்வாய் மனோகரா பகுதியில் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் பெண்ணொருவரை காதல் திருமணம் செய்துள்ளார்.
இவ்வாறான நிலையில், உயிரிழந்த இளைஞனின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதுடன் நேற்றைய தினம் (24-01-2023) இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றது.
இதேவேளை குறித்த சம்பவமானது அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.