அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு போதுமானதாக இல்லாததால், இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் வாரத்தில் தீர்மானிக்கவுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாக அதன் இணைப்பாளர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களுக்கு ஜனவரியில் வழங்கிய ரூ.5,000 உதவித்தொகை தற்போதைய நெருக்கடி நிலைக்கு போதுமானதாக இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கொடுப்பனவு கிடைக்க நடவடிக்கை
இதற்கமைய, எதிர்வரும் 29 ஆம் திகதி கொழும்பில் நியாயமான சம்பள உயர்வு அல்லது கொடுப்பனவு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு ஹோட்டல் தொழிலை பராமரிப்பது சிரமமாக உள்ளதாக ஹோட்டல் பணியாளர்கள் மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தமது கைத்தொழில்துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை எனவும் அதன் தேசிய அமைப்பாளர் ஜயதிலக்க ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.