ஆண் குழந்தைகளை துன்புறுத்தல் செய்வதை குற்றவியல் குற்றமாக நிறுவவும், பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்வது தொடர்பான சட்டங்களைத் திருத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக குற்றவியல் சட்டத்தில் திருத்தங்களை அறிமுகப்படுத்த, அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் குற்றம்
இதன்படி பெண் மற்றும் ஆண் குழந்தைகளை துன்புறுத்தல் செய்வது குற்றவியல் குற்றமாக கருதப்படும்.
இந்தநிலையில் சட்ட வரைவாளர், இதற்கான வரைவை மேற்கொண்டுள்ள நிலையில், சட்டமா அதிபரின் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிப்பதற்கும் நாடாளுமன்ற ஒப்புதலைப் பெறுவதற்கும் அமைச்சரவை, அமைச்சருக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.