2023 ஆம் ஆண்டின் சிறந்த ஐசிசி ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதை இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி வென்றுள்ளார்.
2023-ல் 27 சர்வதேச ஒருநாள் போட்டிளில் 6 சதங்கள், 9 அரைச் சதங்களுடன் 1377 ஓட்டங்களைக் குவித்துள்ளார். ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்ததுடன் 16 பிடிகளை எடுத்திருந்தார்.
மேலும், இந்தியாவில் நடைபெற்ற ICC 50 ஓவர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின்போது 50ஆவது சதத்தைக் குவித்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் டெண்டுகல்ரின் 49 சதங்கள் என்ற சாதனையை விராட் கோஹ்லி முறியடித்திருந்தார்.
உலகக் கிண்ணப் போட்டியில் 11 தடவைகள் துடுப்பெடுத்தாடிய விராட் கோஹ்லி 3 சதங்கள், 5 பவுண்டறிகளுடன் 765 ஓட்டங்களை பெற்று உலகக் கிண்ண தொடர் நாயகியானார்.