இசைஞானிய இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி இலங்கையில் நேற்று திடீரென உயிரிழந்த நிலையில், அவரது சகோதரரும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா இன்று காலை இலங்கைக்கு வருகைத் தந்தார்.
தற்போது பவதாரணியின் உடல் வைக்கப்பட்டுள்ள கொழும்பில் உள்ள மலர்சாலைக்கு அவர் வருகைத் தந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பாடகி பவதாரணி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்றையதினம் மாலை திடீரென உயிரிழந்தார்.
இந்த நிலையில், இசை நிகழ்ச்சிக்காக இலங்கைக்கு வருகைத் தந்திருந்த இசைஞானி இளையராஜா உடனடியாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு விரைந்ததுடன், அதன் பின்னர் பவதாரணியின் உடல் கொழும்பில் உள்ள மலர் சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
மேலும், இசைஞானி இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினர் தற்போது கொழும்பு நோக்கி வருகைத் தந்துள்ளனர்