இலங்கை மீதான சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி) இடைநிறுத்தம் அடுத்த சில நாட்களில் நீக்கப்படும் என்று இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வத்தளையில் செய்தியாளர்களிடம் உரையாற்றிய போது விளையாட்டுத்துறை அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை முழுமையாக நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வர்த்தமானி
இந்நிலையில், இலங்கை கராத்தே சம்மேளனம் மற்றும் இலங்கை மோட்டார் விளையாட்டு சங்கத்திற்காக நியமிக்கப்பட்ட இடைக்கால குழுக்களை கலைக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த ரொஷான் ரணசிங்க குறித்த சம்மேளனங்களின் பதிவை இடைநிறுத்தி பணிகளை தற்காலிகமாக நடத்துவதற்கு இடைக்கால குழுவை நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.