தென்னிலங்கையில் மக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்தி 500 கோடி ரூபாவை மோசடி செய்த நபரையும், அவரது கள்ளக்காதலியையும் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (28) கஹட்டகஸ்திகிலிய பதில் நீதவான் உத்தரவிட்டார்.
கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த மோசடி சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் , சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தனர். கைதான சந்தேக நபர்களை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்களிடம் மோசடி
வீரசேகர முதியன்செலாகே தரிந்து இரோஷன் வீரசேகர என்பவரும், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகையான எகொட கெதரவைச் சேர்ந்த சமிலா பியதர்ஷனி ராஜரத்ன என்பவருமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய்வருகையில்,
2021 ஆம் ஆண்டு கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் “ட்ரெட்வின் ஷேர்” என்ற பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்தி பணத்தை மோசடி செய்துள்ளார். இவர் மக்களை ஏமாற்றி கண்டி பிலிமத்தலாவ பிரதேசத்தில் தனது கள்ளக்காதலியுடன் தங்கியிருந்து மக்களிடம் மோசடி செய்2துள்ளார்.
அதோடு அந்த பணத்தில் காணிகள் மற்றும் வாகனங்களை வாங்கி மிக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
காதலியும் கைது
அதோடு, காதலியின் பெயரில் 80 லட்சம் ரூபாய் நிரந்தர வைப்புத் தொகையும் பராமரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மோசடி செய்யப்பட்ட பணத்தை முதலீடு செய்த குற்றச்சாட்டில் அவரது காதலியும் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட 39 வயதுடைய தரிந்து ஈரோஸ் வீரசேகர பட்டதாரி ஆசிரியராவார். அதோடு அவர் விகாரையொன்றின் பஸ்நாயக்க நிலமேயாகவும் செயற்பட்டார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்துபோது, சந்தேக நபர் இரண்டு வருடங்களாக பொலிஸ் விசாரணைகளுக்கு உதவாது தலைமறைவாக இருந்தவர் எனவும், சந்தேக நபர் எவ்வாறு சம்பாதித்தார் என்பதை வெளிப்படுத்த முடியாத அளவுக்கு சொத்துக்களை வாங்கியவர் எனவும் சுட்டிக்காட்டினர்.
அதோ, குறிப்பிட்ட காலப்பகுதியில் அவ்வளவு பணத்தை பெறுவது சாத்தியமில்லையெனவும் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பாதிகப்பட்ட 180க்கும் மேற்பட்ட விவசாயிகள் முறைப்பாடு செய்துள்ளதாகவும், கடந்த ஜூலை மாதம் கஹடகஸ்டிஜிலிய பிரதேசத்தில் போராட்டத்தை முன்னெடுத்ததாகவும் பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டார்.
மேலும் , சந்தேகநபருக்கு பிணை வழங்கினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடும் என்பதால் ,அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.