அதிதி ஷங்கர்
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதன்பின் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்தார்.
இந்த இரு திரைப்படங்களும் மாபெரும் அளவில் வெற்றியடைந்த நிலையில், தற்போது அதர்வா தம்பி ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விஷ்ணு வர்தன் இயக்கி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
புதிய படம்
இந்நிலையில், அடுத்ததாக எம். ராஜேஷ் இயக்கும் புதிய படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது. அதர்வாவின் தம்பிக்கு ஜோடியாக நடித்துள்ள அதிதி அடுத்ததாக அதர்வாவுடன் இணைந்து நடிக்க போகிறாராம்.
ஏற்கனவே விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி நடித்ததை தொடர்ந்து சூர்யாவுடன் பூரணனூர் படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளிவந்த நிலையில், தற்போது அதர்வா தம்பியை தொடர்ந்து ஆதரவுடன் இணைந்து நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.