நல்லதண்ணியில் சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த வயோதிபர் திடீரென சுகயீனமடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந் நிலையில், அவரது சடலத்தை உறவினர்களிடம் கையளிப்பதற்கு நல்லதண்ணிய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
உயிரிழந்த முதியவர் வெள்ளலஹேவாவின் பஞ்சிமஹத்தாயா (வயது 70) (ஜே.எச். இல.-532640113X) யாத்ரீகர் குழுவொன்றுடன் தலங்கம பிரதேசத்தில் இருந்து சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்துள்ளார்.
மேலதிக சிகிச்சை
இந்த நிலையில் இம்மாதம் 14ஆம் திகதி நல்லதண்ணியில் திடீரென சுகவீனமடைந்து 1990 அம்புலன்ஸ் மூலம் மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தலங்கம பகுதியில் இருந்து வந்த நபரிடம் கயான் என்ற நபரே வைத்தியசாலையில் இந்த முதியவரை கையளித்துள்ளார்.
இதன் போது மஸ்கெலியா வைத்தியசாலையில் அப்போது கடமையில் இருந்த பணியாளர், நோயாளியை அனுமதிக்க கொண்டு வந்தவரது விலாசம் மற்றும் தொலைபேசி இலக்கம் என்பனவற்றை வைத்தியசாலைக்கு வழங்கப்படவில்லை எனவும் நல்லதண்ணிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு மேலதிக சிகிச்சை நிலையில் இருந்ததால் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு (14ஆம் திகதி) அனுப்பி வைக்கப்பட்டார்.
குறித்த நபர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் (19ஆம் திகதி) உயிரிழந்துள்ளதார்.
அவர் வசிக்கும் இடத்தின் சரியான முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் இல்லாத காரணத்தினால் சடலத்தை உறவினர்களிடம் கையளிப்பதற்கு நல்லதண்ணி பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுவதாக நல்லதண்ணி பொலிஸ் பரிசோதகர் சாந்த வீரசேகர தெரிவித்தார்.
மரணித்தவரின் சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.