தனது காவியுடைகளை தவிர்த்து சாதாரண உடையில் இளம் பெண்கள் மூவருடன் சுற்றுலா சென்றிருந்த பிக்கு ஒருவரை அவர் தங்கியிருந்த விகாரையில் இருந்து பொதுமக்கள் விரட்டியடித்துள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தின் தர்கா டவுண் அருகே உள்ள வெலிப்பன்னை பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையொன்றில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
பிரதேசவாசிகளின் செயல்
குறித்த பிக்கு சாதாரண ஆடையில் திஸ்ஸமஹாராம பிரதேசத்துக்கு மூன்று யுவதிகளுடன் சுற்றுலா சென்றுள்ளார்.
இதன்போது அவர் தங்கியிருந்த விகாரை அமைந்துள்ள இடத்திலுள்ள பிரதேசவாசிகளில் சிலர் தற்செயலாக அங்கு சென்றிருந்த சமயத்தில் பிக்குவைக் கண்டு, அவரையும் யுவதிகளையும் காணொளி எடுத்து ஏனைய கிராம வாசிகளுக்கு அனுப்பியுள்ளனர்.
அதன்காரணமாக சுற்றுலா முடிந்து திரும்பி வந்த பிக்கு, பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக தான் தங்கியிருந்த விகாரையை விட்டும் வெளியேற நேர்ந்துள்ளது.