தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தில் யாழ்.சண்டிலிப்பாய் சுகாதார சேவை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நுளம்பு பெருகும் சூழலை பேணிய 13 வீட்டு உரிமையாளர்களிற்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
குறித்த பிரதேசத்தின் ஆனைக்கோட்டை, மானிப்பாய் மற்றும் சுதுமலை பொது சுகாதார பிரிவுகளில் சுகாதாரப்பரிசோதகரின் ஏற்பாட்டில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் நுளம்பு பெருகும் சூழலை பேணிய 13 வீட்டு உரிமையாளர்களிற்கெதிராக இன்று (01.02.2024) மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற அழைப்பாணை
இதன்போது 16500 ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டதுடன் , இனிவரும் காலங்களில் இவ்விதம் நடந்துகொண்டால் ஆறுமாத சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படுவீர்கள் என்றும் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
மேலும், இருவருக்கு எதிராக நீதிமன்ற அழைப்பாணையும் விடுக்கப்பட்டுள்ளது.