கண்டி உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் கணவன் – மனைவி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்றைய தினம் (03-02-2024) பிற்பகல் தலத்துஓயா பொலிஸ் – ஹரகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தண்ணேகும்புரவில் இருந்து ராகலை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று ராகலையிலிருந்து தண்ணேகும்பு நோக்கிச் சென்ற வானுடன் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன் – மனைவி இருவரும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் மெதிரிகிரிய பிரதேசத்தில் வசிக்கும் 68 மற்றும் 62 வயதுடைய கணவன் மனைவியரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மேலும், இந்த விபத்து தொடர்பில் வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



















