நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா சின்னத்திரை நடிகர் முனீஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணம் சோசியல் மீடியாவில் பெரும் சர்ச்சையாகவே பேசப்பட்டு வந்தது.
முனிஷ் ராஜா ‘நாதஸ்வரம்’ சீரியல் மூலம் தான் பிரபலமானார்.
இது மட்டுமல்லாமல் இவர் இன்னும் சில சீரியல்களில் நடித்து வருகிறார். திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை.
பின்னர் இவர் பழனி தொகுதி சுயேட்சை உறுப்பினராக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்நிலையில் தான் முனிஷ் ராஜாவும் பிரியாவும் சமூகவலைத்தளம் மூலமாக காதலித்து வீட்டை எதிர்த்து திருமணமும் செய்து கொண்டனர்.
முனீஜ் ராஜா வீட்டில் இவர்களின் திருமணத்தை ஏற்று கொண்டாலும் ராஜ்கிரண் மற்றும் அவரின் மனைவி இதை ஏற்றுக்கொள்ளவில்லை.
பேட்டி ஒன்றில் ராஜ்கிரண் பிரியா தனது வளர்ப்பு மகள் தான் இனிமேல் பிரியா எந்த இடத்திலும் எனது பெயரை பயன்படுத்த கூடாது என்று கண்டிப்புடன் கூறினார்.
பிரியா
ஆனால் சமீபத்தில் ஜீனத் பிரியா ஒரு வீடியோ காட்சி ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார்.
அந்த வீடியோவில் தான் தற்போது தனது கணவருடன் இல்லை எனவும் தாங்கள் இருவரும் பிரிந்து சில மாதங்கள் ஆகின்றது எனவும் அதிர்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இது சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. தற்போது பிரியா வெளியிட்ட இந்த வீடியோ குறித்து முனீஸ்ராஜா ஒரு பேட்டி ஒன்றில் இதற்கு விடை அளித்திருக்கிறார் .
அதில் இது ராஜ்கிரண் தரப்பு வேலைதான். நடக்கட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று சில வார்த்தைகளில் பிரியாவிற்கும் அவருக்குமான பிரிவை கூறி முடித்துள்ளார்.
அவர்கள் ஏன் பிரிந்தார்கள் ? பிரியா ஏன் கணவரை விட்டு பிரிந்தார்? அந்த கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை.