அம்பாந்தோட்டை , தங்காலை குடாவெல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர் நாகுளுகமுவ – குடாவெல்ல பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடையவராவார்.
உயிரிழந்தவரின் வீட்டிற்கு சென்ற சந்தேக நபரே அவரை வெட்டி கொலை செய்துள்ளதாகவும், அதன்பின்னர் சந்தேக நபர் தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தங்காலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.