சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் நிதியமைச்சின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இன்று (2024.02.06) நண்பகல் 12 மணிக்கு நிதி அமைச்சில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
சுகாதார ஊழியர்களுக்கு பொருளாதார நீதியை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.