கனடாவில் வயது முதிர்ந்தவர்கள் மத்தியில் அதிகளவான விவாகரத்துக்கள் பதிவுவாவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான விவாகரத்துக்கள் காரணமாக ஆண்களை விடவும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
சராசரியாக கனடாவில் விவாகரத்து பெற்றுக் கொள்வோரின் வயதெல்லை அதிகரித்துச் செல்வதாக தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக வயது கூடிய நிலையில் திருமண பந்தத்தில் இணைந்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் இது விவாகரத்துக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கனடாவில் விவாகரத்து பெற்றுக் கொள்ளும் சராசரி வயது 48 என தெரிவிக்கப்படுகிறது. கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த மூன்று தசாப்த காலங்களாகவே 50 அல்லது அதனையும் விட அதிக வயதுடைய தம்பதியினர் மத்தியில் விவாகரத்துக்கள் பதிவாகும் சந்தர்ப்பம் அதிகரித்துச் செல்லும் போக்கு பதிவாகியுள்ளது.