பெருந்தோட்ட பகுதிகளில் பிறந்து வாழ்ந்து வரும் அனைவருக்கும் வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் இதுவரை பெருந்தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கே வீடுகள் வழங்கப்படுகின்றன.
எதிர்வரும் காலங்களில், ஆசிரியர்கள், கலைஞர்கள் சேவையாளர்களுக்கும் வீடுகள் வழங்கப்படும் என தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.