யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்று இரவு (9) ஹரிஹரன் இசை நிகழ்வில் இடம்பெற்ற அசம்பாவிதங்களில் சிக்கி மூவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
அதேவேளை நிகழ்ச்சியில் இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் , 06 பேர் கைது செய்யப்பட்டு , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இசை நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை , இலவசமாக இசை நிகழ்வை கண்டு கழித்துக்கொண்டிருந்த ரசிகர்கள் தடுப்புக்களை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளனர்.
களேபரமான முற்றவெளி
அங்கு , கட்டண அனுமதி பெற்று , இசை நிகழ்வை கண்டு களித்துக்கொண்டிருந்த ரசிகர்கள் வலயத்தினுள் நுழைந்து , மேடை வரையில் சென்று இடையூறு ஏற்ப்டுத்தியுள்ளனர்.
அதுமட்டுமல்லாது , கமராக்கள் பொருத்தப்பட்டு இருந்த உயரமான மேடைகள் , ஒலி அமைப்புக்கள் செய்யப்பட்டிருந்த மேடைகள் , பனை மரங்கள் உள்ளிட்ட உயரமான இடங்களில் ஏறி அட்டகாசத்திலும் ஈடுபட்டனர்.
இதனால் இசை நிகழ்வு இடையில் சில மணி நேரங்கள் இடைநிறுத்தப்பட்டு , பொலிஸார் , விசேட பொலிஸ் அதிரடி படையினர் மேலதிகமாக மைதானத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
அதன்பின்னர் , நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து , இசை நிகழ்வை மீள ஆரம்பித்து சில ஒரு மணித்தியாலத்திற்குள் அவசர அவசரமாக முடித்துக்கொண்டனர்.
அதேவேளை குழப்பங்களுக்கு நிகழ்வின் ஏற்பாடுகளில் உள்ள குறைகளே காரணம் என பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.