ஒரு வருடத்திற்கு 1.5 டிகிரி செல்சியஸிற்கும் அதிகம் புவி வெப்பமடைவது பதிவாகின்றதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் குறித்த நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதிக உயிரினங்கள் இறக்கும் சாத்தியம்
இந்த நிலையில் ஒரு வருடத்தில் அதிகளவான வெப்பம் பதிவாகியுள்ளமையினால் 1,000 இற்கும் அதிகமான உயிரினங்கள் இறப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக பிரித்தானிய ரோயல் வானிலை ஆய்வுக் கழகத்தின் தலைமை நிர்வாகி லிஸ் பென்ட்லி தெரிவித்துள்ளார்.
எனவே கரிம உமிழ்வுகளைக் குறைப்பதற்கு அவசர நடவடிக்கைகள் மேற்கொண்டால் புவி வெப்பமாதலின் வேகம் குறைக்கப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புவி வெப்பமடைதல் 2 டிகிரி செல்சியஸாக உயர்வடைந்தால் கடல்மட்ட உயர்வு, பல்லுயிர் வள இழப்பு உள்ளிட்ட பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பூமியின் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம்
2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் இந்த வருடத்தின் ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 1.52 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அடைந்திருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் வருடங்களில் பூமி வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸாக அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.