பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா தனது வேலைக்கு மத்தியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ராஜிக்கு கதிரை திருமணம் செய்து வைத்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.
ராதிகா பாக்கியாவிற்கு ஆறுதலாக இருந்து வருகின்றார். ஆனாலும் பாக்கியா அடுத்தடுத்து பிரச்சினையை சந்தித்து வரும் நிலையில், தனது தொழிலில் அடுத்தடுத்த இடத்திற்கு சென்றுள்ளார்.
தற்போது பாக்கியாவிற்கு புதிய ஆர்டர் செய்வதற்கு வெளியூர் சென்ற நிலையில், அங்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் வந்துள்ளது.
ஒரு வழியாக தனது ஆர்டரை நல்லபடியாக முடித்த பாக்கியா, இறுதியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிருக்கும், ராஜிக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.