கனடாவில் விரைவில் நேர மாற்றம் அறிமுகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் பருவகால மாற்றத்திற்கு அமைய கனடாவில் ஆண்டு தோறும் நேர மாற்றம் அமுல்படுத்தப்பட உள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 10ம் திகதி ஒரு மணித்தியால மாற்றம் அமுல்படுத்தப்பட உள்ளது.
இதன்படி மக்கள் தங்களது கடிகாரங்களை ஒரு மணித்தியாலம் முன்னோக்கி நகர்த்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பகல்நேரத்தை சேமிக்கும் நோக்கில் இவ்வாறு நேர மாற்றம் அமுல்படுத்தப்பட உள்ளது.
எனினும் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் கடிகாரங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் கருவிகள் சாதனங்களில் தானியங்கி அடிப்படையில் நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.