நீரிழிவு நோயாளிகளுக்கு பூண்டு எவ்வாறு உதவுகின்றது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு நோய்
சர்க்கரை நோயாளிகளுக்கு உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியமாகும். இவர்கள் பூண்டை எடுத்துக்கொண்டால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும் என்பது தெரியவந்துள்ளது.
பொதுவாக உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் தான் சர்க்கரை நோய் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது.
ஆனால் முன்னெச்சரிக்கைகள் மற்றும் முறையான உணவு முறைகளை பின்பற்றினால் இந்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.
பூண்டு செய்யும் அற்புதம்
நிபுணர்களின் கருத்துப்படி, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் பூண்டு முக்கியமான பங்கு வகிக்கின்றது.
ஆனால் அதே வேலையில் பூண்டை எவ்வளவு உட்கொள்ள வேண்டும்எ ன்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
சர்க்கரை நோயானது குணப்படுத்த முடியாத நாள்பட்ட நோயாக இருக்கும் நிலையில், இதனை குணப்படுத்த மருந்து இல்லையென்றாலும், கட்டுப்படுத்த மருந்துகள் இருக்கின்றது.
பூண்டின் சத்துக்கள்
பூண்டில் கார்போஹைட்ரேட், கொழுப்புகள், புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி3, வைட்டமின் பி5, வைட்டமின் பி6, வைட்டமின் பி9, வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, மெக்னீசியம் உள்ளன. அதோடு மாங்கனீசு, பாஸ்பரஸ், சத்துக்கள் உள்ளன. பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் மற்றும் செலினியம் ஆகியவை உள்ளது.
பூண்டில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ள நிலையில், இதன் கார தன்மைக்கும், வாசனைக்கும் இதில் இருக்கும் அலிசின் என்ற கந்தக கலவையே காரணம்.
சர்க்கரை நோய்க்கு பூண்டு மருந்து
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் மட்டுமல்லாமல், டைப் 2 நீரிழிவு நோயைத் தடுப்பதிலும் பூண்டு பங்கு வகிக்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
பூண்டில் துத்தநாகம் மற்றும் இயற்கையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் அவை இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கின்றன.
இருப்பினும், ஹோமோசைஸ்டீன் என்ற அமினோ அமிலம் நீரிழிவு நோய்க்கான ஆபத்து காரணியாகும். பூண்டின் நீண்ட கால நுகர்வு உடலில் இந்த கலவையை அதிகரிக்கிறது.
ஆதலால் பூண்டை எச்சரிக்கையுடனே உட்கொள்ள வேண்டும். நாள் ஒன்றிற்கு ஒரு பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவை நிச்சயம் கட்டுப்படுத்த முடியும் என்று கூறப்படுகின்றது.