பாரிய ஹெரோயின் கடத்தல்காரரான ஷிரான் பாஷிக்குடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பெண் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் குறித்த கடத்தல்காரருடன் கள்ள உறவில் ஈடுபட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கஸ்பேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்கஸ்ஓவிட்ட பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றை சுற்றிவளைத்த பின்னர் 480 மில்லி கிராம் ஹெரோயினும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைதானவர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த பெண் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.