தன்னுடைய இயக்கத்தில் வெளியான லால் சலாம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் சோகத்தில் இருக்கிறாராம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
லால் சலாம்
3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் படத்தை இயக்கியிருந்தார்.
லைகா நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர், ரஹ்மான் இசையமைக்க விஷ்ணு விஷால், விக்ராந்த் லீடு ரோலில் நடிக்க, ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்து வெளியான படம் லால் சலாம்.
நடிகர் ரஜினிகாந்த் இப்படத்தில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரை ஏற்று நடித்திருந்தார். ஆனாலும் இப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்த தவறியதாக கூறப்படுகிறது.
ஐஸ்வர்யாவின் மேக்கிங், திரைக்கதை என எதுவுமே எடுபடவில்லை என்று ரசிகர்கள் ஓபனாகவே விமர்சனத்தை முன்வைத்தனர்.
இதனால் படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பலத்த அடி வாங்கிவிட்டது. இந்த படத்தின் தோல்வியால் ஐஸ்வர்யா சோகத்தில் இருப்பதாகவே கூறப்படுகிறது.
வெளியான தகவல்
லால் சலாம் ஆடியோ லான்ச்சில் பேசிய ஐஸ்வர்யா, “இந்தப் படம் ரிலீஸ் ஆன பிறகு நானும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இருப்பேன்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், ஆடியோ லான்ச்சில் அவ்வளவு பேசிவிட்டோம், இப்பொழுது படம் தோல்வியடைந்ததை குறித்து ஐஸ்வர்யா தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பிவருகிறாராம்.
அதுமட்டுமல்லாமல், இப்படத்தில் தனது அப்பா ரஜினிகாந்த் நடித்ததால் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்துவிட்டது. முக்கியமாக இது ரஜினி படம் ஃப்ளேவர் ஒட்டிக்கொண்டது.
ஒருவேளை மொய்தீன் பாய் கேரக்டரில் ரஜினிகாந்த்துக்கு பதிலாக இன்னொருவரை நடிக்க வைத்திருந்தால் படத்தின் கருத்தை புரிந்துகொண்டு மக்கள் கொண்டாடியிருப்பார்களோ என்றும் தன்னுடைய வட்டத்தில் பேசிவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.