திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாம்புக்கடிக்கு இலக்காகி மூன்று மாத கற்பிணித்தாயொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று (20.02.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகள்
திருகோணமலை மொரவெவ ஆறாம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த இமேஷா குமாரி (வயது 23) என்ற மூன்று மாத கற்பிணித் தாயொருவர் நேற்று மாலை மாடு கட்டுவதற்காக சென்றபோது பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார்.
இந்நிலையில் அந்த பெண் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்திருந்ததாகவும் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.