ஆப்கானிஸ்தானுடனான மூன்றாவது ரி20 போட்டியின் பின்னர் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இலங்கை ரி20அணியின் தலைவர் வனிந்துஹசரங்கவிற்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடுவர் லின்டல் ஹனிபல் வனிந்து ஹசரங்க நடந்துகொண்டவிதம் குறித்து ஆட்டநடுவரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம்
வனிந்து ஹசரங்க நடுவருடன் நடந்துகொண்ட முறை காரணமாக ஐசிசியின் ஒழுக்காற்றுவிதிகளின் கீழ் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என கூறப்படுகின்றது.
முன்னைய போட்டிகளில் வனிந்து ஹசரங்க நடந்துகொண்ட விதத்தி;ற்காக அவர் இரண்டு தகுதிகுறைப்பாட்டு புள்ளிகளை பெற்றுள்ளதால் குற்றமிழைத்தார் என உறுதிசெய்யப்பட்டால் அவர் இரண்டுபோட்டிகள் அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளிற்கு தடையை எதிர்கொள்ளக்கூடும்.
அதேவேளை ஐசிசி இதுவரை இது குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.