வரி பதிவுக்கான வரி அடையாள இலக்கத்தை (TIN) வழங்கும் போது தேசிய அடையாள அட்டையை (NIC) இணைத்துக்கொள்வதற்கான முன்மொழிவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பிரேரணை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும்போது NIC எண்ணை வரி அடையாள இலக்கமாக பயன்படுத்த முன்மொழியப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
முன்மொழிவு தொடர்பான பரிந்துரைகள் 6 நிறுவனங்களிடமிருந்து கோரப்பட்டுள்ளதாகவும், இதுவரை நான்கு நிறுவனங்கள் தமது பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.